Welcome

Welcome

அனைவருக்கும் . . .அவசர . . .அவசிய . . . வேண்டுகோள் ...

அனைவருக்கும் . . .அவசர . . .அவசிய . . . வேண்டுகோள் ...

Saturday, 22 October 2016

BSNLEU மாநில செயற்குழுவும், 8வது AIC வரவேற்பு குழுவும் ...

அருமைத் தோழர்களே ! 20-10-16 அன்று சென்னையில் நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமும், நமது BSNLEU சங்கத்தின் 8வது  அகில இந்திய மாநாட்டின் வரவேற்புக்குழுவின் கூட்டமும் தோழர் எஸ். செல்லப்பா தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. 
நடைபெற்ற கூட்டத்தில்  நமது மதுரை மாவட்டத்திலிருந்து  தோழர்கள் எ. பிச்சைக்கண்ணு, சி. செல்வின் சத்தியராஜ், எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திரசேகர்  மற்றும் எஸ். சூரியன்  ஆகிய 5 பேரும் கலந்து கொண்டனர். அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் நிதி கோட்ட ஒதுக்கீடு செய்யப்ப ட்டத்தில்  விருத்துநகர் , நாகர்கோவில் இரு மாவட்டங்களும் நிறைவு செய்து விட்டன.
நமது மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ள ரூபாய் 7 லட்சத்தில் முதற்கட்டமாக ரூபாய் 3,20,000  மாநில சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது மீதம் உள்ள தொகையினை போனஸ் அல்லது சம்பள பட்டுவாடா ஆகியவற்றில்  முழுமையான நிதியை அளித்து விட வேண்டுமென மாநில சங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளச் சங்கங்கள் காலத்தே இதற்கான ஏற்பாட்டை செய்து முடித்திட வேண்டுகிறோம்.

27.10.2016 ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம்.

அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில்  மத்திய அரசின் துணை டவர் நிறுவனம் அமைக்கும் திட்டத்தை  எதிர்த்து 27.10.2016 FORUMத்தின் ஆர்ப்பாட்ட அறைகூவலை வெற்றிகரமாக்குவோம் . . .
நாடு முழுவதுமுள்ள 65000 செல் கோபுரங்களை தனியாகப்பிரித்து 20000 கோடி மதிப்பீட்டில்..
துணை நிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து 
27/10/2016 BSNL  அனைத்து சங்கங்களின் சார்பாக நாடு தழுவியஆர்ப்பாட்டம்
இன்றைய நிலைமையில் இந்தியா எங்கும் உள்ள நமது BSNL டவர்களை மற்ற நிறுவனங்கள் வருமானத்தை பெருக்கி கொள்வதற்காக பகிர்ந்து கொள்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். எந்த முகாந்திரமும் இல்லாமல் துணை டவர் கம்பெனி ஆக மாற்ற காரணம் என்ன ?  இதன் மூலம் டவர் மீதுள்ள நமது பிடிமானம் போய்விடும். இது நமது BSNL நிறுவனத்தின் பொருளாதாரம் மேலும் சீர்கெடும் நிலைமைக்கு தள்ளி விடும்.  கொஞ்சம் கொஞ்சமாக தரைவழி சேவை மட்டுமே நம்மிடம் இருக்கின்ற நிலைமைக்கு போய்விடும். இது நமது BSNL நிறுவனத்தை படுகுழியில் தள்ளும் நரேந்திர மோடி அரசின் திட்டமாகும். இதனை நாம் முறியடிக்க வேண்டும்BSNL  என்னும் பெரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்க முயலும்...தனி நிறுவன  துணை நிறுவன முயற்சியைத் தடுப்போம்...ஒன்றாய் அணி திரள்வீர் தோழர்களே என, அறைகூவி அழைக்கின்றோம்.

Saturday, 8 October 2016

அக்டோபர்-8 பட்டு(பாட்டு)கோட்டை நினைவு நாள்...

காவேரிக்கரைக் கழனியில் உழவு வேலை செய்யும் தொழிலாளிஅவனுக்கு உணவு கொண்டு செல்லும்மனைவி ஆகியோரை ஒரு திரைப்படம் பார்ப்பது போலக் காட்சி அழகுடன் கவிதையாக்கி இருப்பதைஎண்ணி வியப்படையாமல் இருக்க முடியுமா?
நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக மிக இன்றியமையாத ஒரு தொழில் விவசாயம் ஆகும்வேளாண்மை செழித்தால்தான் நாட்டில் வறுமை ஏற்படாதுஅதே நேரம் விவசாயத் தொழிலாளர் நலனும் பேணப்படவேண்டும்.இந்தஎண்ணங்களைப்பட்டுக்கோட்டையார்பாடலில்வெளிப்படுத்தியிருப் பதைக்காணலாம்.
Image result for கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்(1959)"சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர்நடத்தி

கம்மாக்கரையை ஒசத்திக்கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்

தகுந்த முறையில் தண்ணீர்விட்டு
நெல்லு வௌஞ்சிருக்கு - வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு - அட
காடு வௌஞ்சென்ன மச்சான் - நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்
என்று மனைவிகேட்கிறாள்
வர்க்க உணர்வுடைய அந்த உழைப்பாளிக்
கணவன் பதில் சொல்கிறான்.
காடு வௌயட்டும் பொண்ணே - நமக்குக்
காலம் இருக்குது 
பின்னே
இந்தப் பதில் அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவதுநாடோடி மன்னன் திரைப்படத்தில்இப்பாடல்காட்சிஅருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
...அக்டோபர்-8 பட்டு(பாட்டு)கோட்டை நினைவு நாளை போற்றுவோம்.

என்னய்யா ... இப்படி . . . பண்றிங்களையா . . .

சென்னை CGM அலுவலகத்தில் நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி கோரி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டதில் -மதுரையில் நடந்தது.

அருமைத் தோழர்களே ! சென்னை CGM-BSNL அலுவலகத்தில் நீக்கப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி கோரி  தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்திட நமது தமிழ் மாநில சங்கம் அரை கூவலுக்கிணங்க, 7-10-15 காலையில்  -மதுரை தல்லாகுளம் லெவல்-4 வளாகத்தில் தோழர்கள், எ. பிச்சைக்கண்ணு & கே. வீரபத்திரன் இருவரின் கூட்டுத் தலைமையில்  எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம்   நடந்தது. . . .
ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி BSNLEU   மாவட்ட செயலர் தோழர்,சி, செல்வின் சத்தியராஜ், TNTCWU மாவட்ட உதவிச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்ட செயலர் தோழர் என். சோணை முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினர். BSNLEU மாவட்ட உதவி தலைவர் தோழர். வி. சுப்புராயலு நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

Thursday, 6 October 2016

BSNL-லில் உள்ள 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு விண்ணப்பம்...

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510 Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும்விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.12-2/2016-Rectt
பதவி: Junior Telecom Officer
தகுதி: பொறியியல் துறையில் Tele Commmunication, Electronics, Radio, Computer, Electrical, Electronics, IT, Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியலில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை கேட்-2017 தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கேட்-2017 தேர்வு நடைபெறும் தேதி: 04.02.2017 முதல் 12.02.2017 வரை
JTO பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2017 முதல் 31.01.2017 வரை
JTO பணி தொடர்பான கூடுதல் விவரம் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ www.externalexam.bsnl.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்

Wednesday, 5 October 2016

11 ஒப்பந்தஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் .CGM அலுவலகத்தில் 11 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கம் - போராட்டம்.


உள்ளாட்சித் தேர்தல் ரத்து…

:உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் துவக்கம் முதலே அதிமுக அரசு பல்வேறுகுளறுபடிகளை செய்து வந்தது. மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சித் தலைவர்ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறைமுகத் தேர்தல் கொண்டு வந்தது.அனைத்து கட்சிகளும் எதிர்த்தது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படும் சுழற்சி அடிப்படையிலான இடஒதுக்கீடும் முறையாக, முழுமையாக செய்யப்படவில்லை. பழங்குடியினர், தாழ்த்தப்பட் டோருக்கான ஒதுக்கீடுகள்வெளிப்படைத் தன்மையோடு, விகி்தாச்சார அடிப்படையில் நடைபெறவில்லை. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பும் கடும் எதிர்ப்புக்குஉள்ளானது. தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே வேட்புமனுத்தாக்கல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுக்கு உரிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை. இந்தநிலையில் தேர்தலை ரத்து செய்து சென்னை நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. குறைபாடுகளை களைந்து உள்ளாட்சித்தேர்தலை ஜனநாயகப்பூர்வமாக நடத்த இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென விரும்புகிறோம்.

Tuesday, 4 October 2016

04-10-16 எழுச்சி மிகு சிறப்பு செயற்குழு கூட்டம்...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்ட BSNLEU  சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு தலைமையில் 04-10-16 அன்று மதுரை CSC-TKM-TRC-யில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. செயற்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்த ஆய்படு பொருளின் மீதான அறிமுக உரையை மாவட்டச் செயலர் தோழர்.C. செல்வின் சத்தியராஜ் நிகழ்த்தினார். ஆய்படு பொருளின் மீது 34 தோழர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திர சேகர், முன்னாள் மாவட்ட சங்க நிவாகிகள் எம். சௌந்தர், எஸ். சூரியன், ஆர். சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நடைபெற்ற சிறப்பு மாவட்ட செயற்குழுவில் , சென்னையில் நடைபெறவிருக்கும் BSNLEU 8வது அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை நிதியாக ரூபாய் 1,65,000 வசூல் வந்தது. இத் தொகை உடனடியாக மாநில சங்கத்தின் வாங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. ஏற்கனவே, மதுரை மாவட்ட சங்கத்தின் முன் பணமாக ரூபாய் 15,000 த்துடன் சேர்த்து ஆகி மொத்தம்  ரூபாய் 1,80,000 கொடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்திற்கு மாநில சங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மீதி தொகை வழங்கிட மதுரை  மாவட்ட செயற்குழு திட்டமிட்டது. இறுதியாக தோழியர் வி. ராஜேந்திரி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

நமது BSNLEU -CHQ மத்திய சங்க செய்தி...CGM (O)-ல் 11 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கம்-போராட்டம்...