Sunday 21 August 2016

பாட்டாளிகளின் தோழன் ஜீவா ! பிறந்த நாள் இன்று....

சுதந்திர போராட்ட வீரராக, பொதுவுடமை போராளியாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்றுதமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய  தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய  ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை  இயக்க பற்றாளராக, பொதுவுடமை  இயக்க தலைவராக செயலாற்றியவர்ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் .ஜீவானந்தம்நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்--உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார்இயற்பெயர் சொரிமுத்துசிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு  படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம்  மீது தனி ஆர்வம்  கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகை யாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர்பொதுவுடமை  மேடைகளில் முதல் முறையாக  தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா  தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல
இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு ஆகும்.தோழர் ஜீவாவின் நினைவை நெஞ்சில் கொள்வோம்...

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தோழரின் நினைவினைப் போற்றுவோம்