Thursday 4 August 2016

வைப்பு நிதி, ஊழியர்களின் சொந்தப் பணம் . . .சூதாட நீங்கள் யார்?

மாநிலங்களவையில் தபன்சென் ஆவேசம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணம் அவர்களின் சொந்தப் பணம்; அதில் கை வைப்பதற்கு நீங்கள் யார்? என்று மத்திய அரசை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியுவின் அகில இந்திய பொதுச் செயலாளருமான தபன் சென் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.தற்போது நடைபெற்று வரும், நாடாளுமன்ற மழை க்காலக் கூட்டத்தொடரிலேயே, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை எடுத்து, பங்குச் சந்தையில் வைத்து சூதாட மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பங்கேற்று தபன்சென் எம்.பி. பேசியதாவது:“இந்தப் பிரச்சனை மிகவும் ஆழமானது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்றுமாற்றி ஒன்று என பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அரசாங்கம் ஏன் இவ்வாறு தலையிடுகிறது என்றே தெரியவில்லை.
பட்டும் தெளியவில்லை
முதலில் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதித்தீர்கள். பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்டீர்கள். பின்னர் தொழிலாளர்கள் முன்பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்தீர்கள். தொழிலாளர்கள் ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்த பின் அதையும் திரும்பப் பெற்றீர்கள். அடிப்படையில் இது தொழிலாளர்களின் சொந்தப் பணம். அதைத்தான் அவர்கள்திரும்ப எடுத்துக்கொள்கிறார் கள். அதைத் தடுப்பதற்கும், கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் நீங்கள் யார்? இவ்வாறெல்லாம் செய்யா தீர்கள் என்று அனைத்துத் தொழிற்சங்கங்களும் கோரின. அவற்றையெல்லாம் நீங்கள் கேட்கவே இல்லை. ஆனால் அதன்பின் உங்களுக்குக் கேட்கக்கூடியவாறு, நாடு முழுதும் உள்ள தொழி லாளர்கள் ஒன்றிணைந்து போராடி, உங்களைக் கேட்க வைத்தார்கள். தொழிலாளர்கள் பிரச்சனை களை நீங்கள் புரிந்து கொள்ளும் மொழியில் சொல்வதற்கு, தொழிலாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
மீண்டும் மீறுகிறீர்கள்
இப்போது தொழி லாளர்களின் பணத்தை மிகவும்நாசம் விளைவிக்கும் சோதனையில் ஈடுபடுத்த முன்வந்தி ருக்கிறீர்கள். அவர்கள் பணத்தை பங்குச் சந்தையில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு உங்கள் வாதம் என்ன? சிறந்த ஆதாயம் (Better return) கிடைக்கும் என்பதாகும். இது விவாதத்திற்குரிய ஒன்றா கும். ஆனால் ஒரு விஷயம் விவாதத்திற்கு உரியது அல்ல.மத்திய அறங்காவலர் குழுவும் (The Central Board of Trustees), தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் ஒரே குரலில் உங்களிடம் : “சூதாட்டத்தின் மூலம் ஈட்டும் கூடுதல் பணம் எங்களுக்குத் தேவை இல்லை,’’ என்று கூறியிருக்கிறார்கள். எவ்விதமான ஊசலாட்டமுமின்றி மிகவும் தெளிவான முறையில் அவர்கள் இதைக் கூறி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின், ஏன் நீங்கள் அவர்களின் அனுமதி இல்லாமல், அவர்களை எதுவும் கேட்காமல், வருங்கால வைப்பு நிதி விஷ யத்தில் தலையிடுகிறீர்கள்?
உண்மையை மறைக்கிறீர்கள்
இது தொடர்பாக உங்கள் அனுபவம்தான் என்ன? ஓராண்டுக்குள் 7.45 சதவீதம் ஆதாயம் கிடைக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லாமல் விட்டது என்னவெனில், முதல் பத்து மாதங்களில், உங்களுக்கு (வைப்பு நிதியில்) 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும் என்பதாகும். நீங்கள் அதை இங்கே சொல்லாமல் இருக்கிறீர்கள். எப்படியோ சமாளிக்கிறீர்கள்.ஒரு விஷயத்தை, உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இதனை அமைச்சர் ஒப்புக்கொள்வாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்பட்டிருக்கும் தொகை முழுவதுமாக தொழி லாளர்களுக்குச் சொந்தமான தாகும். அவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு இதில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் வேலையளிப்பவர்கள் செலுத்தும் தொகையும் கூட, தொழிலாளர்களின் கொடுபடா ஊதியமே (deferred wage) ஆகும். கொடுபடா ஊதியமும் தொழிலாளர்களையே சாரும். எனவேதான்எங்களை சிரமத்திற்கு உள்ளாக்காதீர்கள்; எங்களுக்கு அதிர்ஷ்டத்தின் மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலுமோ கூடுதலாக எந்தப் பணமும் வேண்டாம்; தயவு செய்து மத்திய அறங்காவலர் குழு தீர்மானிக்கும் வழக்கமான முதலீட்டு வழிகளையே பின்பற்றுங்கள்’’ என்று தொழி லாளர்கள் கூறுகிறார்கள்.ஆனால் நீங்களோ ஊகச் சந்தையில் முதலீடு செய்வதற்கான சிந்தனையை அவர்கள் மத்தியில் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது ஐந்து சதவிகிதத் தொகையை மட்டும் எடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பதினைந்து சதவீதமாக அதிகரிக்கும். ஆனாலும் ஐந்து சதவிகிதத்தைக் கூட எடுப்பதற்கு தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தயவுசெய்து இத்திட்டத்தை இப்போதே கைவிடுங்கள்.
மூடு மந்திர பேச்சு வேண்டாம்
உலக அனுபவம் என்ன சொல்கிறது?தனி நபர் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வது என்பது வேறு. அந்த தனி நபர் லாபம் ஈட்டுவதையோ அல்லது நஷ்டம் அடைவதையோ புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுபோன்று ஓய்வூதியம் மற்றும் பொதுப் பணத்தை ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்தால் நஷ்டம், நஷ்டம் மேலும் நஷ்டம் என்பதுதான் நடக்கும். இதுதான் உலக அனுபவமும் ஆகும். நீங்கள் எந்த நாட்டின் அனுபவத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். ஜப்பான், பிரான்ஸ்,பிரிட்டன் அல்லது அமெரிக்காஎன்று எந்த நாட்டின் அனு பவத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அந்த நாடுகளில் சமாளிக்க முடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்படுமானால், அரசாங்கம் ஓர் உத்தரவாதமான தொகையைத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறது. அதேபோன்று இங்கே கொடுப்பதற்கு நீங்கள் தயாரா?அவ்வாறு எவ்வித உத்தர வாதத்தையும் கொடுக்காமல், அந்தப் பாணியை இங்கே எப்படி நீங்கள் பின்பற்ற முடியும்?
புரியும் மொழியில்பேசுவார்கள்
எனவே, தொழிலாளர்கள், ஊழியர் வைப்பு நிதியில் போட்டுள்ள தொகையுடன் - அவர்கள் வாழ்நாள் முழுதும்சேர்த்து வைத்துள்ள தொகையு டன் - விளையாடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்.சூதாட்டத்தின் மூலம் கூடுதல் பணம் அவர்களுக்குத் தேவை இல்லை. உங்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் வங்கிகளிடம் பெறப்பட்டுள்ள 8.5 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க கவனம் செலுத்துவது நல்லது. அங்கே கவனம் செலுத்துங்கள். தொழிலாளர்களின் சொந்தசேமிப்புடன் விளையாடா தீர்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். இதனை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் விரும்பும் மொழியில் தொழிலாளர்கள் அதை உங்களுக்குப் புரிய வைப்பார்கள்.’’இவ்வாறு தபன்சென் பேசினார்.

No comments: