Monday 22 August 2016

தனியார் தொலைத்தொடர்பு சந்தாதாரரின் வேதனை...

நான் ரூ. 2200 கொடுத்து ரிலையன்ஸ் லேண்ட் லைன் கனக்ஷனை அலுவலகத்துக்காக இரண்டு வருடத்திற்கு முன்பு வாங்கினேன். உபயோகத்திற்கான பில்லை சரியாக கட்டிவருகிறேன். சென்ற மாதம் எந்த ஒரு அறிவிப்பும் எனக்கு அனுப்பாமல் என் தொலைபேசி எண்ணை துண்டித்துவிட்டார்கள். அருகில் உள்ள ரிலையன்ஸ் சென்டரில் விசாரித்தால், இப்போது CDMAவை முழுவதுமாக நீக்கிவிட்டோம். நீங்கள் ரூ. 2500 கொடுத்து வேறு DEVICE வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். அலுவலக எண் என்பதனால் வேறு வழியின்றி நான் வாங்க தயாரானபோது சொன்னார்கள், நான் தற்போது உபயோகித்து வரும் தொலைபேசி எண் கிடைக்காது. புதிய எண் தான் தருவோம் என்றுரூ. 2500 கொடுத்து புதிய எண்ணை வாங்க நான் தயார்.
ஆனால்...
1. நான் உபயோகித்து வரும் தொலைபேசி எண் என் வணிக உபயோகத்திக்கானது. திடீரென்று 4 G க்கு மாறுகிறோம் என்று முன் அறிவிப்பில்லாமல் துண்டித்ததால் என் வணிக தொடர்புகள், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட நட்டத்தை ரிலையன்ஸ் எனக்கு ஈடு செய்யுமா?
2. என் விசிட்டிங் கார்டு , லெட்டர் ஹெட், பில் புக், வவுச்சர், பிரௌசர், என என் அனைத்து ஆபீஸ் ஸ்டேஷனரிகளிலும் என் தற்போதைய தொலைபேசி எண் அச்சிட்டு வைத்திருக்கிறேன். என் புதிய ஸ்டேஷனரிகளைஅச்சிடும்செலவைரிலையன்ஸ்ஏற்குமா?
3. 4G பெயரில் கொள்ளை அடிக்க, தன் தொழிலை மேம்படுத்துகிறேன் என்று எங்களை போன்று சுயதொழில் செய்பவர்களின்தொழிலைமுடக்குவதுநியாயமா

- மு. உமா மகேஷ்.

No comments: